×

தூத்துக்குடியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூன் 7: தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (7ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
 தூத்துக்குடி  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் (புதிய முகவரி : ஆசிரியர் காலனி 1ம் தெரு, பாண்டியன் கிராம  வங்கி பின்புறம்) நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல  முன்னணி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு  முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்
படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும்  கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். மேற்கண்ட  தகுதியுள்ள, தனியார்துறையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது  பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம்  செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனவும்,  தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய  இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Private Employment Camp ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...