×

ஆழ்வார்திருநகரி அருகே தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து 6 பேர் காயம்

வைகுண்டம், ஜூன் 7:  ஆழ்வார்திருநகரி அடுத்த கேம்லாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாசானமுத்து மகன் முனீஸ்வரன் (33), கீழக்கரையைச் சேர்ந்த விஜயராஜா மகன் லோகேஷ் (27), அதே ஊரைச் சேர்ந்த ஆத்திமுத்து மகன் விஜயன் (24) மற்றும் பிரான்சிஸ், லிங்கம், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஒரே காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஆழ்வார்திருநகரி அடுத்த ஆலங்குடி பக்கமுள்ள ஆதாரங்கள் பாலத்தில் வந்த திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 6 பேரும் படுகாயமடைந்தனர்.  அவர்களின் கூக்குரல் கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,Alwarthirunagar ,
× RELATED வேட்டவலம் அருகே தனித்தனி விபத்தில் 3 பேர் படுகாயம்