×

கோடையால் கருப்பாநதி அணை வறண்டது

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் கடையநல்லூர், ஜூன் 7: கடையநல்லூரில் கோடை வெயிலால் கருப்பாநதி அணை முற்றிலும் வறண்ட விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடையநல்லூர் நகராட்சிக்கு கருப்பாநதி அணைக்கட்டு, உள்ளூர் உறைகிணறுகள் மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கருப்பாநதி அணைக்கட்டு முற்றிலும் வறண்டு விட்டதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பவுண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடையநல்லூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருப்பாநதி அணை முற்றிலும் வறண்டு விட்டது. இருந்தாலும் நகராட்சி நிர்வாகம் ஆற்றுப்பகுதியில் உள்ள அனைத்து கிணறுகளையும் தூர்வாரி ஊற ஊற மின்மோட்டார் மூலம் இயக்கப்பட்டு குடிநீரை பொதுமக்களுக்கு பற்றாக்குறை இல்லாமல் வழங்கி வருகிறது. இருப்பினும் நகராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை வீணாக்காமல் குறைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : water dam ,
× RELATED சிறுவாணி அணையின் நீர்தேக்க பகுதியில்...