கீழாம்பூரில் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா

கடையம், ஜூன் 7: கடையம் அருகே கீழாம்பூரில் ஏதென்ஸ் ஆர்க் நகரில் 72 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியின் திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி கல்விக்குழு தலைவரும் சிவந்திபுரம் பஞ். முன்னாள் தலைவருமான ஜோசப் தலைமை வகித்தார். மதுரை புதிய கோவனன்ட் ஆலய நிறுவனர் ஜெஸ்டின் சிறப்புரையாற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆக்னஸ், இஸபெல்லா, சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் ஆனி மெட்டில்டா மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் அமலா ஜூலியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், இந்திய வங்கியின் பிராந்திய மேலாளர் கோபி கிருஷ்ணன், தமிழ்நாடு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி குழுமங்களின் மாநில தலைவர் கல்யாணிசுந்தரம்,  நெல்லை ஜெகோவா நிஷி பில்டர்ஸ் உரிமையாளர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். பள்ளி கல்விக்குழு உறுப்பினர் ஜோசப் லியாண்டர் வரவேற்றார். பள்ளியின் நிர்வாகி ராபர்ட் பள்ளியின் சிறப்பம்சம் குறித்து விளக்கினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

× RELATED காமராஜர் சிலைக்கு மரியாதை