×

நீட் தேர்வை கைவிட வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 7:மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் முத்துக்கண்ணன் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கு அனுமதிக்காமல் மத்திய அரசு தமிழகத்தில் பிடிவாதமாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்க்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இனியும் காலதாமதம் செய்யாமல் நீட் தேர்வில் விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற மத்திய அரசு உடனடியாக அனுமதிப்பதுடன், மாநில அரசும் வலியுறுத்த வேண்டும். மோடி அரசுடன் எடப்பாடி அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்வதால் தான் இந்நிலை நீடிக்கிறது. எனவே அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தோர் மீண்டும் ஒன்றுபட்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த விலக்கு கோரி களம் காண முன்வர வேண்டும். இவ்வாறு முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

Tags : CPI (M) ,
× RELATED நீட் ஆள்மாறட்ட வழக்கில் சிபிஐயை...