×

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய சமூக ஆர்வலர்

கூடலூர், ஜூன் 7: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு கோத்தார் வயல் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டியுள்ள நடைபாதை கால்வாயில் அடிக்கடி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக நடு கூடலூர் பகுதியிலிருந்து வரும் கால்வாய்கள் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேரும் சகதியுமாக கால்வாயில் வந்து  நிரம்பி வழிந்தன. இதனால் மக்கள் பெறும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலரும் பூ வியாபாரியுமான அமீர் என்பவர் 100 மீ உள்ள இக்கால்வாயில் சேர்ந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினார். நகராட்சி நிர்வாகம் இந்த கால்வாயை கழிவுகள் தேங்கி நின்று மழைக்காலத்தில் வீடுகளுக்குள் மழை நீர் போவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார்.

Tags :
× RELATED கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை