×

வேலை தேடி திருப்பூர் வரும் வட மாநில மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்

திருப்பூர், ஜூன் 7:  தொழில் நகரான திருப்பூருக்கு வேலை தேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். தினமும், 500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்குகின்றனர். அவர்களை ஏற்கனவே புக்கிங் செய்தவர்கள், அழைத்து செல்கின்றனர். திருப்பூரில் ஏற்கனவே பணியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம், தங்களுக்கு வேலையை தேடிக்கொள்கின்றனர். எந்த அறிமுகமும் இல்லாமல் திருப்பூருக்கு வேலை விஷயமாக வருவோரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அத்தகையவர்களிடம் சிலர் பேச்சு கொடுக்கின்றனர். தெரிந்த இடத்தில் வேலை இருப்பதாக கூறி அழைக்கின்றனர். என்ன வேலை, எந்த நிறுவனம் என்பதையெல்லாம் தெரிவிப்பதில்லை. அழைத்துச் செல்பவர் மட்டுமே இந்தி பேசுவதால் நம்பி உடன் செல்கின்றனர். அவர்களிடம் 1,000 ரூபாயை கறாராக பெற்றுக்கொண்டு, ஏதேனும் ஒரு கம்பெனியில் சேர்த்து விடுகின்றனர்.  வேலை தேடி, தினமும் வட மாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் வருவதால், தொழில்துறையினர் சார்பில் ரயில்வே அனுமதியுடன் சிறப்பு உதவி மையம் ஏற்படுத்த வேண்டும். என்னென்ன வேலை, எந்தந்த நிறுவனங்களில் உள்ளது. தொடர்பு எண் போன்ற விவரங்களை கொடுத்து உதவலாம். இதன் மூலம் அப்பாவி நபர்கள் மோசடி ஆட்களிடம் சிக்கி, பணம் இழப்பதை தடுக்க முடியும். தொ ழில் நிறுவனங்களுக்கும் தகுதியான நபர், எளிதில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags : state ,Tirupur ,
× RELATED உயர் ரத்த அழுத்த அபாயத்தில் இருந்த...