×

வேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் கோவை  கிருஷ்ணா கல்வி குழுமம்

  கிருஷ்ணா கல்வி குழுமம் ஐந்து கல்லூரிகளை அமைத்து கல்வி உலகில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பெற்றோர்களின் வேண்டுதல் தங்கள் குழந்தைகளை நன்கு படிக்கவைத்து, வேலைக்கு அனுப்புவதே. அவர்களின் கனவு நிஜமாகிறது. இக்கல்வி குழுமத்தில் சேரும் மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து வேலைத்திறனை உயர்த்தி, நல்ல வேலை நிறுவனத்தில் அதிகமான சம்பளத்தில் சேர்த்து விடுவதை தாரக மந்திரமாக கருதி இக்கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் மலர்விழி. இக்கல்வி குழும கல்வி நிறுவனங்களில் 23,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்  படித்து வருகின்றனர். சிறந்த கட்டிட அமைப்பு, புதிய தொழில்நுட்பத்துடன் வகுப்பறைகள், போதிய வசதிகளுடன் தற்கால தொழில்நுட்பத்துடன் செய்முறை பயிற்சி கூடங்கள், ஆசியாவில் தலைச்சிறந்த நூலகம் என பல்வேறு வசதிகளுடன் உள்ள தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் மனிதவள துறையின் தரப்பட்டியலில் சிறந்த தரத்தினை பெற்ற கல்வி நிறுவனம்.

கோவை குனியமுத்தூரில் உள்ள  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இந்த வருடம் முதல் 5 வருட எம்.டெக் படிப்பை பிரபல சாப்ட்வேர் நிறுவனமான விரட்ச்சுசாவுடன் இணைந்து வழங்கவுள்ளது.  8 ஆயிரம் மாணவர்களை உள்மதிப்பீட்டு தேர்வினை பேப்பரினை பயன்படுத்தாமல் கணினி மூலம் எழுதிவைத்து சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் உலக அளவில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்துள்ளது. வேலைவாய்ப்பினை அறிந்து இளங்கலை பிரிவில் டூரிசம் மற்றும் டிராவல் மேலாண்மை துறை படிப்பை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. மாணவர்களை அரசு தேர்வு எழுதி, அவர்களை இந்திய ஆட்சி பணி சேர வைக்க முதுகலை பிரிவில் எம்.ஏ பொது நிர்வாக படிப்பினை கடந்த வருடம் அறிமுகப்படுத்தி மாணவர்களை அரசு தேர்விற்காக தயார் செய்து வருகிறது. இக்கல்வி நிறுவனத்தின் கீழ் உள்ள கோவைப்புதூர்  கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குறுகிய காலத்தில் அபரிதமான வளர்ச்சி அடைந்து தரமான கல்வி வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் கீழ் 2 பொறியியல் கல்லூரி, 2 கலை அறிவியல் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி, குனியமுத்தூரில்  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கலை அறிவியல் கல்லூரியும், கோவைப்புதூரில்  கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி,  கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. மேலும், உலக தரம் வாய்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்துள்ளது. மாணவர்கள் தொழில் நிறுவனங்கள் சென்று பயிற்சியும் பெறுகின்றனர். பல தொழில் நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றுள்ளது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் விருது குனியமுத்தூர்  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 2ம் இடத்தையும்,  கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 4ம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கோவை செயின்ட் பால்ஸ்
கல்லூரியின் சிறப்பு அம்சங்கள்

கோவை செயின்ட் பால்ஸ் கல்வி குழும நிறுவனர் டாக்டர். டேவிட் கூறியதாவது: 2010ம் ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டு 9 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது மகளிருக்கு பாதுகாப்பையும் அவர்களின் திறமைகளை வளர்க்கும் விதமாகவும் கல்லூரி அமைந்துள்ளது. 8 இளநிலைப்பட்ட படிப்புகளும் 1 முதுகலைப் பட்ட படிப்பும் உள்ளது. எங்கள் கல்லூரி பல்கலைக்கழகத் தர வரிசையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இலவச பஸ் வசதி :கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் படிக்கும் மாணவிகளுக்கு கோவையில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் இலவச பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி படிப்புடன் இலவச ஐஏஎஸ் பயிற்சி: எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அரசுப்பணியில் சேர்வதற்கு கல்லூரி படிப்புடன் I.A.S, TNPSC வங்கித்தேர்வுக்கான பயிற்சியும் அவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

இலவச பயிற்சி வகுப்புகள்:

இக்கல்லுாரியில் தையல் பயிற்சி , தட்டச்சு பயிற்சி , கணிணி பயிற்சி, செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி, டேலி, புரோஜெக்ட் மற்றும் மாணவிகள் ஆங்கிலத்தில் பேசுவதற்கான சிறப்பு வகுப்புகள் போன்ற எல்லா வசதிகளும் இலவசம். மாணவிகளுக்கு ஸ்மார்ட் ஆய்வகம் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. 3ம் ஆண்டு முடிக்கும் மாணவிகளுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.  கல்லூரியில் மாணவிகள் தங்கி கல்வி பயில விடுதி வசதியும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422 2404615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Coimbatore Educational Corporation ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்