×

கருங்கல் அருகே வாழைத்தோட்டத்தில் ஐஸ் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்

கருங்கல், ஜூன் 7: கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று பகுதியில் ஏராளமான வாழை தோட்டங்கள் உள்ளன. அங்கு சமீபத்தில் நிலம் வாங்கிய ஒருவர் ஐஸ் பிளாண்ட் அமைக்க முயற்சி செய்துள்ளார்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டார். இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதற்கான கருவிகளுடன் தொழிலாளர்கள் வந்தனர். இதை அறிந்த கருங்கல் ேபரூராட்சி முன்னாள் தலைவர் எப்சிராணி தலைமையில் பொதுமக்கள் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து கருங்கல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெகுபாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிலத்தின் உரிமையாளர் உரிய அனுமதியுடன் ஆழ்துளை கிணறு அமைக்க வந்துள்ளார் என கூறினர்.
அனால் பொதுமக்கள் இந்த பகுதி முழுவதும் விளைநிலங்களால் நிரம்பியது. இங்கு ஐஸ் பிளாண்ட் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.
எனவே இங்கு ஐஸ் பிளாண்ட் அமைக்க கூடாது என கூறினர். மேலும் 15 நாளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஐஸ் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதி இருந்தால் அதை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என கூறினர்.
இதையடுத்து போர்வெல் கருவிகளுடன் தொழிலாளர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : bananat ,ice plant ,Grantham ,cancellation ,
× RELATED ‘ஐஸ் பிளாண்ட்’ அமைவதை தடுக்க வேண்டும்