×

மண்டைக்காடு அருகே பைக் மோதி தொழிலாளி சாவு

குளச்சல், ஜூன் 7: மண்டைக்காடு அருகே அத்திமூடு பகுதியை சேர்ந்தவர் நேசமணி (60). கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுற்கு வெட்டுமடை சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மண்டைக்காடு புதூர் பிஆர்எஸ் காலனியை சேர்ந்த அனிஸ் முஸ்தபா (21) ஓட்டி வந்த பைக், நேசமணி மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நேசமணி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி கமலம், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அனிஸ் முஸ்தபா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bike collision worker ,Murthy ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...