×

கொள்ளிடம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது-வெளியூர் சென்றதால் குடும்பத்தினர் தப்பினர்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த ரெத்தினம் மகன் இளங்கோவன்(45). இளங்கோவன் மற்றும் அவர் மனைவி குழந்தைகளுடன் பழமையான அரசு கான்கிரீட் வீட்டில் குடியிருந்து வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இளங்கோவன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரசு கான்க்ரீட் தொகுப்பு வீடு நேற்றிரவு பெய்த மழையினால் இடிந்து கீழே விழுந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றதால் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதேபோல் கூத்தியாபேட்டை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட பழமையான கான்கிரீட் வீடுகள் உள்ளன. அந்த வீடுகளில் தற்போது வசித்து வருபவர்கள் தினமும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மிக பழமையான வீடுகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிய கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கொள்ளிடம் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது-வெளியூர் சென்றதால் குடும்பத்தினர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Elangovan ,Rethinam ,South Street, Kootiampettai village ,Kollidam, Mayiladuthurai district ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...