×

பவானி வட்டத்தில் ஜமாபந்தி

பவானி, ஜூன் 7: பவானி வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பவானி தாலுகா அலுவலகத்தில் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் முருகேசன் தலைமையில், சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், கல்பாவி, ஒலகடம், குறிச்சி, காடப்பநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைந்தது. இதில் கிராம கணக்குக்குள் தணிக்கை செய்யப்பட்டதோடு, முதியோர் உதவித்தொகை, விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 160க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில், பவானி தாசில்தார் வீரலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் கிருஷ்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அதிர்ஷ்டராஜ், தேர்தல் துணை தாசில்தார் ராவுத்தா கவுண்டர், மண்டலத் துணை தாசில்தார் நல்லசாமி, துணை தாசில்தார் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து ஜம்பை, ஒரிச்சேரி, புன்னம், ஆப்பக்கூடல் ஆகிய கிராமங்களுக்கு இன்று (7ம் தேதி)  ஜமாபந்தி நடைபெறுகிறது.

Tags : Bhavani ,
× RELATED மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியும்...