×

பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஒரே நாளில் 53 திருமணம்

பவானி, ஜூன 7:  பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஒரே நாளில் 53 திருமணங்கள் நடைபெற்றன. முகூர்த்த நாளான நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொள்வதற்காக மணமகன், மணமகள் தரப்பில் கடந்த சில நாட்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோயில் அலுவலகத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்ததால் கோயில் நிர்வாகம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து திருமண ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.இதைதொடர்ந்து காலை 5 மணி முதல் திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது. சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், ஆறுமுகப் பெருமான் சன்னதி, ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் அடுத்தடுத்து திருமண ஜோடிகள் அமர்ந்து திருமணம் செய்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து திருமணம் முடிந்த தம்பதிகள் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். நேற்று ஒரேநாளில் 53 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

Tags : Bhavani Sangameswara ,
× RELATED பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் ஒரே நாளில் 53 திருமணம்