×

பண்ணைக் குட்டைகள் அமைக்க 2.5 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர், ஜூன் 7: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மழை காலததில் வழிந்தோடும் மழைநீரை பண்ணைக் குட்டைகளில் சேமித்து வைத்து தேவையான போது விவசாயத்திற்கு பயன்படுத்தி விவசாய பயிர்களை பாதுகாத்து விவசாயத்தினை அதிகரிக்க செய்து அதிக மகசூல் அடையலாம். பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாக இருப்பதால் விவசாயிகளிடம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழக அரசு கடலோர மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20ம் ஆண்டில் பண்ணைக் குட்டைகள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது.
2019-20ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை பண்ருட்டி, அண்ணாகிராமம், கீரப்பாளையம், மேல்புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, விருத்தாசலம், கம்மாபுரம், மஙகளூர் மற்றும் நல்லூர் ஆகிய அனைத்து வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ.2.5 கோடி மானியத்தில் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்திலுள்ள உதவி
செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை நிலத்தின் சர்வே எண் சிட்டா, சிட்டா அடங்கல், நில வரைபடம், ஆதார் கார்டு நகல், புகைப்படம் மற்றும் முகவரி, கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து பண்ணைக்
குட்டைகளை அமைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்