×

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த முதியோர் காப்பகத்தில் ஒப்படைப்பு

விருத்தாசலம், ஜூன் 7: சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. அவற்றில் பயணம் செய்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்
சின்னப்பன், தனிப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமை
யிலான போலீசார் ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழுக்கு உடை அணிந்து, தாடியுடன் சுற்றித்திரிந்த இரண்டு முதியவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும் தஞ்சாவூர் பகுதி
யிலிருந்து வந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாததால் அனாதையாக பல இடங்களில் சுற்றித் திரிந்து, கடைசியாக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ரயில்வே காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார், டிஎஸ்பி சுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த ஆலோசனை மற்றும் உத்தரவின் பேரில் முதியவர்கள் இருவரையும் மீட்டு, அவர்களுக்கு முகச்சவரம் செய்து, உணவளித்து, புதிய துணிமணிகள் வாங்கி உடுத்தி பின்பு அவர்களை பாதுகாப்பாக விருத்தாசலம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வள்ளலார் முதியோர் காப்பகத்தில்
ஒப்படைத்தனர்.
மேலும் இதுபோல் ஆதரவற்று வருபவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் விருத்தா
சலம் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விருத்தாசலம் ரயில்வே நிலையத்தில் நேற்று நடந்த இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : hospital ,railway station ,Vriddhachalam ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!