×

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ திருவிழா

பண்ருட்டி, ஜூன் 7: பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் பிரமோற்சவ விழா நேற்று (6ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற்றது. நேற்று காலை 7:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று முதல் வரும் 13ம் தேதி வரை தினந்தோறும் காலை 9 மணிக்கு உற்சவர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு 7 மணிக்கு வெள்ளிப்படி சட்டத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திரிபுர சம்காரமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு திரிபுரசம்ஹாரம் எனும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திரிபுரசம்காரமூர்த்தி தேரிலும் சரநாராயண பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி ஐதீக முறைப்படி மூன்று அரக்கர்கள் எரித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Brahmotsavam ,festival ,
× RELATED திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி...