×

மலைகிராம மக்கள் 10 பேர் மீது வழக்கு

சின்னசேலம், ஜூன் 7: கல்வராயன்மலையில் துரூர்- பொற்பம் இடையிலான மண் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதனால் துரூர் பகுதியை சேர்ந்த சின்னராஜ், முருகேசன், காமராஜ், ரமேஷ், வடிவேலு மற்றும் சிலர் சேர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு அனுமதியின்றி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையை அகலப்படுத்தி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாலப்பட்டு வனவர் பவுல் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சாலை அகலப்படுத்தும் பணியை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
 அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் வனத்துறையினரை தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பவுல் கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் 10 பேர் வனத்துறையினரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mountain village ,
× RELATED வாச்சாத்தி மலை கிராம மக்கள் பாலியல்...