முசிறியில் பரபரப்பு வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

லால்குடி, ஜூன் 7: லால்குடி வக்கீல் சங்க தேர்தல் கடந்த ஏப்ரல் 29ம் தேதி நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான எடிசன், முருகேசன், ஜான்சன் ஆகியோர் தலைமையில் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக வக்கீல் கென்னடி, துணைத்தலைவராக சசிகுமார ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதில் செயலாளராக சுதாகர், இணை செயலாளராக முத்து, பொருளாளர் மதியழகன் ஆகியோர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் எடிசன் தலைமை வகித்து புதிய நிர்வாகிளை அறிமுகப்படுத்தி ஆலோசனை வழங்கினார். இதில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரசாத், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் சுதா, கூடுதல் மாவட்ட நீதிமன்ற நடுவர் மோகனபிரியா, சார்பு நீதிமன்ற நீதிபதி கீதா மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Related Stories: