₹4,500 லஞ்சம் வாங்கி கைதான பெண் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்

நாமக்கல், ஜூன் 7: மோகனூரில் இறப்பு சான்றிதழ் வழங்க, ₹4,500 லஞ்சம் வாங்கி கைதான பெண் இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராதா(40). இவர் கடந்த 1995ம் ஆண்டு, ஆண்டாபுரத்தில் இறந்து போன தனது பாட்டி தங்கம்மாளுக்கு, இறப்பு சான்றிதழ் கேட்டு மோகனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, சான்றிதழ் வழங்க இளநிலை உதவியாளர் காந்திமதி(29), ₹4,500 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத ராதா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி  ராதா, கடந்த 29ம் தேதி, இளநிலை உதவியாளர் காந்திமதியிடம் ரசாயனம் தடவிய ₹4,500 கொடுத்துள்ளார்.

காந்திமதி பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் காந்திமதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சேலம் பத்திர பதிவுத்துறை துணை தலைவர் ஆனந்தன், காந்திமதியை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : bachelor assistant ,
× RELATED பழநி ஜிஹெச்சில் லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை