×

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து முகாம் சிறைவாசிகள் போராட்டம்

திருச்சி, ஜூன் 7: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து சிறைவாசிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 29 பேர், நைஜீரியர்கள் 5 பேர், வங்க தேசத்தை சேர்ந்த 15 பேர், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் உள்பட 50 பேர் உள்ளனர். இவர்கள் போலி பாஸ்போர்ட், கள்ளத் தோணியில் வந்தது, சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முகாம் சிறையில் கடந்த 2 நாட்களாக குடிநீர் சரிவர வரவில்லை. இதை கண்டித்து நேற்று காலை முகாம் சிறைவாசிகள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மரத்தில் ஏறியும், கயிறு எடுத்து தூக்கு போடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் லாரியில் வழங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கைதிகளால் வளர்க்கப்படுகிறது. இதற்கு தண்ணீர் விடுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்றார்.

Tags : camp prisoners ,premises ,Tiruchi Central Jail ,
× RELATED பெத்துல் சார்ந்த சோயா தயாரிப்புகள்...