கூட்டுறவு சங்கத்தில் ₹3 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூன் 7: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நேற்று ₹3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 150 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவற்றை கொள்முதல் செய்ய ஈரோடு, திருச்செங்கோடு, கோவை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலத்தை நடத்தினர்.

இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹5,256 முதல் ₹6,396 வரை ஏலம் போனது.  ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 150 மூட்டை பருத்தி ₹3 லட்சத்துக்கு ஏலம் போனது. தற்போது பருத்தி சீசன் முடிந்து விட்டதால்,  கூட்டுறவு சங்கத்துக்கு பருத்தி வரத்து குறைந்து விட்டது. மாசி பட்டத்தில் பயிரிட்ட பருத்தி, அடுத்த மா இறுதியில் ஏலத்துக்கு வரும் என கூட்டுறவு சங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.

× RELATED செங்கம் அருகே 3 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்