தேசிய கராத்தே போட்டிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு

நாமக்கல், ஜூன் 7: புதுடில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் கராத்தே சங்க பொதுக்கூட்டம், சங்கத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவையில் நடைபெற்ற கராத்தே தேர்வு போட்டியில் கலந்துகொண்டு, புதுடில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வு பெற்ற பவித்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மனிஷா, பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவி லத்திகா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன், பெற்றோர்கள், கராத்தே மாஸ்டர்கள், கராத்தே பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவிகளை வாழ்த்தினர்.

Tags : Namakkal Girls Examination for National Karate Competition ,
× RELATED 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து