×

முத்துப்பேட்டை அரபு சாஹிப்ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா

முத்துப்பேட்டை, ஜூன் 7: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகை அடுத்த நாள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருட 531ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று மாலை முதல் துவங்கியது. முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான பாக்கர்அலிசாஹீப் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலிலிருந்து கந்தூரி பூபல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது. இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லக்கு, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்குகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வலத்தில் இடம்பெற்றது. ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றது. அங்கிருந்து மீண்டும் அதே வழியாக பெரிய கடைத்தெருச் சென்று மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவாசலை சென்றடைந்தது. பின்னர் இரவு 9மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது. இதில் தர்கா டிரஸ்டி தமீம் அன்சாரி சாகிப், கந்தூரி விழா கமிட்டி தலைவர் காதர் சுல்தான், ஜமாத் தலைவர் ஓ.எஸ்.எம்.ஹனீபா, செயலாளர் பசீர் அகமது, துணைத் தலைவர்கள் ஹாஜா அலாவுதீன், நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி இனிகோர் திவ்யன், பயிற்சி டி.எஸ்.பி பிருந்தா, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்.இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள் 28 சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Muthupet ,mosque celebration ,Arab Sahib Antwerp ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...