×

வடுவூரில் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

மன்னார்குடி, ஜூன் 7: வடுவூரில் உள்ள 5 அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் 5 அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, மகிழங்காடு மக்கள் மன்றமும் இணைந்து மகிழ மரக்கன்றினை வழங்கி வரவேற்று அவர்களின் கைகளாலேயே பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நடசெய்தனர்.
வடுவூர் அக்ரஹாரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப் பாளர் ராஜவேலு தலைமை வகித்தார். இதேபோல் வடுவூர் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடுவூர் புதுக்கோட் டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வடுவூர் மேல்பாதி அரசு தொடக்கப் பள்ளி, வடுவூர் வடபாதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளி களில் புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்கப்பட்டது.
வடுவூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகிழம் மரங்கள் அடர்ந்த இருந்ததால் மகிழங்காடு என அழைக்கப்பட்டது. தற்போது ஒற்றை இலக்கத்தில் தான் மகிழம் மரங்கள் இருக்கிறது. மகிழம் மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்க்கவே மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டது. அஞ்சல் துறை அதிகாரி மாதவன் நன்றி கூறினார்

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு