×

கண்டமாக கிடக்கும் குத்துச்சண்டை மைதானம்

விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கும் குத்துச்சண்டை மைதானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள் விளையாட்டு மற்றும் வெளி விளையாட்டுகளுக்கு என தனித்தனியே மைதானங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விளையாட்டு அரங்கத்திற்குள் அமைந்துள்ள குத்துச்சண்டை மைதானம் பராமரிக்கப்படாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக குத்துச்சண்டை மைதானம் பராமரிக்கப்படாததால் தலங்கள் உடைந்தும் புற்கள் மற்றும் செடி வளர்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது.

இதனால் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மைதானத்தை சீரமைக்க வேண்டும். மாணவர்கள் கூறுகையில், ‘‘இங்கு பயிற்சிக்காக வருவோர் மைதானம் இருந்தும் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். மாணவர்கள் விளையாட்டு திறமை மற்றும் உடல் திறன் மேம்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவியர் சாதிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பயிற்சி பெறுவோர் நலன் கருதி மைதானத்தை முறையாக பராமரிக்க வேண்டும். புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி