×

ஆசிரியர் தேர்வறைக்குள் கைக்குட்டை செல்போனுக்கு தடை

சிவகங்கை, ஜூன் 7: சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் ஜூன் 8ல் எட்டு மையங்களிலும், ஜூன் 9ல் இரண்டாம் தாள் 18 மையங்களிலும் நடக்க உள்ளது. தேர்வர்கள் காலை 7.35 மணிக்கு தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும். தேர்வு மைய வாயிலில் காவலர் சோதனை 8.30மணி வரை நடக்கும். தேர்வு நடைபெறும் வேளையில் தேர்வர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை.

ஓ.எம்.ஆர் விடைத்தாளின் பிரதியை பெற்று செல்ல வேண்டும். தேர்வர்கள் தேர்வறைக்குள் நுழைவுச்சீட்டு, நீலம், கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். செல்போன், டேப்லட், லேப்டாப், கால்குலேட்டர் மற்றும் கைக்குட்டை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வறைக்குள் அறை கண்காணிப்பாளர்கள், சக தேர்வர்கள் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த அறிவுரைகளை பின்பற்றாத தேர்வர்கள் அன்றைய தேர்வை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்படாததோடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து மட்டுமே தேர்வெழுத வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : examination ,editor ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்