×

சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தல்

சாத்தூர், ஜூன் 7: சாத்தூர் வடக்குரத வீதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் வடக்குரத வீதியில் அம்மா உணவகம் உள்ளது. இதன் அருகே காய்கறி மார்க்கெட் மற்றும் திரையரங்கம் உள்ளது. இந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால் அம்மா உணவகம் அருகே உள்ள காலியிடத்தை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அம்மா உணவகம் பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க பல்வேறு தரப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘சாத்தூர் அம்மா உணவகம் அருகே மக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அம்மா உணவகத்திற்கு வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : health campus ,
× RELATED திருமழிசை மார்க்கெட்டில் கொரோனா ஆய்வு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்