நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி, ஜூன் 7: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் நாளை (8ம் தேதி) நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களையும் வகையில மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான கூட்டம் நாளை (8ம் தேதி) தேனி மாவட்டத்தில் நடக்க உள்ளது.

தேனி தாலுகாவில் முத்துத்தேவன்பட்டியில் தாட்கோ மாவட்ட மேலாளர் முருகசெல்வி தலைமையிலும், பெரியகுளம் தாலுகாவில், வடபுதுப்பட்டியில் பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகாவில் சண்முகசுந்தரபுரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சாந்தி தலைமையிலும், உத்தமபாளையம் தாலுகாவில் சுருளிப்பட்டியில் உத்தமபாளையம் சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையிலும், போடி தாலுகாவில் ராசிங்காபுரத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகாயினி தலைமையிலும் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடக்க உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் பொது விநியோகக் கடைகள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் மனு அளிக்கலாம்.

Tags : meeting ,
× RELATED அகில இந்திய அளவில் தேனி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 4வது இடம்