சின்னமனூர், ஜூன் 7: சனீஸ்வரபகவான் பிடியில் சிக்கியவர்கள் தோஷ பரிகாரம் செய்ய குச்சனூரிலுள்ள புண்ணிய நதியான சுரபி நதி சுகாதாரக் கேடாக கிடப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வரபவான் திருக்கோயில் சுருளி அருவியும், முல்லைப்பெரியாறும் இணைந்து பாயும் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகள் தாண்டிய இந்த சுயம்பு ஸ்தலத்தில் சனிபகவானின் பிடியில் சிக்கியவர்கள் தேடி வந்து பல்வேறு பரிகார தோஷங்கள் செய்கின்றனர். இதற்கா நீக்க சுரபி நதியான புண்ணிய நதியில் நீராடி பழைய துணிகளை அவிழ்த்து புதிய துணிகளை உடுத்தி நிவர்த்தி யாகி செய்வதற்கு ஸ்மூலஸ்தன சுயம்பு மூர்த்திக்கு அர்ச்சனை செய்கின்றனர்.
உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து பரிகாரம் செய்கின்றனர். வாரத்தில் ஒரு நாளான சனிக்கிழமையில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். சுரபி நதியில் குளித்துவிட்டு எள் முடுச்சுகளை வாங்கி அணையா விளக்கில் ஏற்றி, பொரி, உப்பு ஆகியவைகளை கொடி மரத்திற்கிட்டு மண் காக்கையை தலையில் சுற்றி பீடத்தில் படைப்பர். பின்னர் சனீஸ்வரபகவானை வணங்கி செல்வர். தமிழக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிலையில் காகித பேப்பர்களும், தேங்காய் சிரட்டைகளும், உதிர்ந்த மலர்கள் சிதறியும், வாழைப்பழ தோல்களும் ஆங்காங்கே ஆலய வளாகத்திற்குள் கண்டபடி சிதறி சுத்தமில்லாமல் கிடக்கிறது. மன அமைதி தேடி வருகின்ற பக்தர்கள் அவைகளை கண்டவுடன் மேலும் விரக்தி அடையும் நிலையே ஏற்படுகிறது.
வருடத்தில் ஆடி மாதம் ஐந்து சனிக் கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த சுயம்பு கோயிலில் மும்மூர்த்திகளாக சேரும் ஒருவராக சனீஸ்வரபவான் விளங்கி வருகிறார். கடந்த 3 மாதமாக முல்லைப்பெரியாற்றிலிந்து தண்ணீர் திறந்துவிடாததால் சுரபி நதி காய்ந்து அறைகுறையாக நிற்கும் தண்ணீர் மாசு படிந்து பச்சை பாசி படர்ந்து குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. இதை கோயில் நிர்வாகம் சுத்தம் செய்யாமல் மெத்தனமாக இருப்பதால் சுரபி நதி உள்பட கோயில் வளாகம் முழுவதும் சுகாதாரமின்றி இருக்கிறது. வருகின்ற பக்தர்கள் சுரபிநதியில் இறங்காமல் தொட்டியில் நிரப்பபட்டிருக்கும் தண்ணீரில் குளித்து தோஷ பரிகாரம் செய்து திரும்புகின்றனர். பொதுப்பணித்துறையினர் சுரபி நதியின் சுத்தத்தையும், புண்ணியத்தையும் மேம்படுத்தும் விதமாக பல ஆயிரகணக்கானோர் பரிகார தோஷம் கழிக்க வருவதால் சனிக்கிழமை மட்டுமாவது கட்டாயமாக சுயம்பு கோயிலின் மதிப்பினை பெருக்கிடும் விதமாக தண்ணீர் எடுத்து விட வேண்டும். கோயில் வளாகத்தையும் சுத்தம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.