×

திருப்புவனம் அருகே கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை

திருப்புவனம், ஜூன் 7: மடப்புரத்தில் தமிழக அரசின் மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாடு திட்டத்தின் சார்பில் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நேற்று நடந்தது. புன்செய் நிலப்பகுதிகளில் வளர்க்கப்ப்டும் கால்நடைகளுக்கு சத்துப் பற்றாக்குறை, சினைப் பிடிப்பதில் சிக்கல், மடி நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுப்பதற்காக மானாவாரி கிராம விவசாயிகள் மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோடைகாலத்தில் கால்நடைகள் பராமரிப்பு குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சுரேந்தர், கனிமொழி, ஆய்வாளர் பால்கன், உதவியாளர் கருப்பையா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

Tags : turnaround ,
× RELATED சென்னையில் வெள்ள பாதிப்புக்கு...