×

காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி

காளையார்கோவில், ஜூன் 7: காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழச்சியில் பொது மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. சிவகங்கை தனித்துணை ஆட்சியர் பொன்ராமர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட 18 கிராமங்களில் இருந்து பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

மனுக்கள் மீதான தீர்வுகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜமாபந்தியில் காளையார்கோவில் வட்டாட்சியர் சேதுநம்பு, மண்டல துணை வட்டாட்சியர் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், கலந்து கொண்டார்கள். வருகின்ற 11ம் தேதி காளையார்கோவில் உள்வட்டம், 12ம் தேதி மறவமங்கலம் உள்வட்டம், 13ம் தேதி சிலுக்கபட்டி உள்வட்டம், 18ம் தேதி மல்லல் உள்வட்டம் ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

காரைக்குடி :காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாலுகாவுக்கு உட்பட்ட 5 பிர்கா, 74 பஞ்சாயத்துகள், 64 கிராமங்களுக்கான 1428ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு குறித்த ஜமாபந்தி நேற்று துவங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை வகித்தார். தாசில்தார் பாலாஜி உள்பட 49 வி.ஏ.ஓக்கள் கலந்து கொண்டனர். இதில் நில வரி வசூல், பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை குறித்த மனுக்கள் பெறப்பட்டன. கிராம கணக்குகள் சமர்பிக்கப்பட்டது.
நேற்று சாக்கோட்டை உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நடந்தது. 11ம் தேதி கல்லல் உள்வட்ட  கிராமங்களுக்கும், 12ம் தேதி பள்ளத்தூர் உள்வட்ட கிராமங்களுக்கும் நடக்கிறது. 13ம் தேதி காரைக்குடி உள்வட்டம், 18ம் தேதி மித்ராவயல் உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நடக்கவுள்ளது.

Tags : office ,Kalayyorko Taluk ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...