×

கமுதி அருகே அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா

கமுதி, ஜூன் 7:  கமுதி அருகே பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் பொட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ள அய்யனார் சுவாமி, கணபதி, கருப்பர், சேமங்குதிரை போன்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுமக்கள் காப்பு கட்டி விரதமிருந்து இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரிய உடப்பங்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : festival ,temple ,Kammi ,
× RELATED திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்..!!