×

கோவை- ராமேஸ்வரம் இடையே தினசரி ரயில்

பழநி, ஜூன் 7: கோவை- ராமேஸ்வரம் இடையே தினசரி ரயில் இயக்க வேண்டுமென வாசன் பாசறை சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வாசன் பாசறை மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தென்னக ரயில்வேயின் நிர்வாக மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு: திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்த திருவனந்தபுரத்தில் இருந்து பழநி வழியாக மதுரைக்கு ரயில் சேவை நீட்டிப்பு செய்தது போல், கடந்த 30 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருந்த கோவை- கொல்லம், கோவை- ராமேஸ்வரம், பாலக்காடு- கன்னியாகுமரி வழித்தடங்களிலும் விரைவில் தினசரி ரயில் சேவை துவங்க வேண்டும். மேலும், சென்னை எழும்பூர் முதல் மங்களூரு வரை இயங்கி வரும் விரைவு ரயிலை திருச்சி, திண்டுக்கல், பழநி மார்க்கமாக இயக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Coimbatore ,Rameswaram ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...