×

கொடைக்கானலில் விதிமீறி செயல்பட்ட 5 கட்டிடங்களுக்கு சீல்

கொடைக்கானல், ஜூன் 7: ொடைக்கானலில் விதிமீறி செயல்பட்ட மேலும் 5 கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கொடைக்கானலில் விதிமீறிய, அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட வணிக கட்டிடங்களை சீல் வைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் 300க்கும் மேற்பட்ட விதிமீறிய வணிக கட்டிடங்களை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் கோர்ட் உத்தரவை மீறி சட்ட விதிமுறைகளுக்கு மாறாக வணிக கட்டிடங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் அறிவுறுத்தல்படி சிறப்பு நகரமைப்பு அலுவலர் பெரியசாமி தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் பகுதியில் ஆய்வு செய்த போது சொசைட்டி பகுதிக்கு அருகே 3 வணிக கட்டிடங்கள் விதிமீறி செயல்பட்டது தெரிந்தது. அதேபோல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் வழியில் 2 தங்கும் விடுதிகள் விதிமீறி செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் 5 கட்டிடங்களையும் பூட்டி சீல் வைத்தனர்.

Tags : buildings ,Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...