×

திண்டுக்கல் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி பாலக்காடு- திருச்செந்தூர் ரயில் ஜூன் 30 வரை ரத்து

திண்டுக்கல், ஜூன் 7: பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் ஜூன் 30ம் தேதி வரை திண்டுக்கல்- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு காலை 9 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி செல்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் - மதுரை, திண்டுக்கல் - திருச்சி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரயில் ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை திண்டுக்கல் - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய ஆகிய கிழமைகளில் இந்த ரயில் திண்டுக்கல் - நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். அதேபோல் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மதுரை- நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதே போல் திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ஜூன் 5 ம்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் நெல்லை- திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய், வெளளி கிழமைகளில் நெல்லை- மதரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர சென்னை- குருவாயூர் விரைவு ரயில் மேற் குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் இயக்கப்படும்.

மதுரை- கோவை பயணிகள் ரயில் மதுரையில் வழக்கமாக காலை 7:45 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 7.15 மணிக்கு ( புதன்கிழமை தவிர) மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். நெல்லை- மயிலாடுதுறை, நெல்லை பயணிகள் இணைப்பு ரயில் திண்டுககல் - திருச்சி திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே மேற்குறிப்பிட்ட நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்படும். அதே போல் நாகர்கோவில்- கோவை பயணிகள் ரயில் திண்டுக்கல் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். நாகர்கோவில்- மும்மை விரைவு ரயில் திங்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Dadukkalai Railway ,Palakkad-Tiruchendur ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே தண்டவாளம்...