×

வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் கழிவுநீர் கால்வாயை மூட சிமெண்ட் பலகை வந்தது

வத்தலக்குண்டு, ஜூன் 7: வத்தலக்குண்டுவில் தியாகி சுப்பிரமணிய சிவா பெயரில் பஸ்நிலையம் உள்ளது. டென்னிஸ் கிளப் சாலையில் இருந்து பஸ்நிலையத்திற்கு நுழையுமிடத்தில் முன்பு அனைவரும் எளிதாக செல்லும் வகையில் இருந்தது. தற்போது அங்கு புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக உயரமாக கழிவுநீர் கால்வாய் அமைத்து அதன்மேல் தண்ணீர் குழாய்கள் செல்லுமாறு வைத்துள்ளனர். இந்த குழாய்களை பள்ளம் தோண்டி பதித்து கால்வாய் மீது சிமெண்ட் பலகை போட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

இதனால் வயதானவர்கள் ஏறி செல்ல முடியாமல் கால்வாயில் விழுந்து காயம் அடைந்தனர். மேலும் கால்வாய் மூடாததால் கழிவுநீர் துர்நாற்றம் வேறு வீசியது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்த தினகரனில் மே 28ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் கால்வாயை மூடுவதற்காக சிமெண்ட் பலகைகளை வந்து இறக்கியுள்ளனர். விரைவில் பஸ்நிலையத்திற்குள் அனைவரும் எளிதாக நுழையும் வண்ணம் சிமெண்ட் பலகைகளை வைத்து கால்வாயை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் புலம்பல்
முகாம் பற்றிய தகவலை சொல்லவே இல்லை. கடைசிநேரத்தில்தான் கேட்டு தாமதமாக  வந்தோம். ஆனால் அதற்குள் அலுவலர்கள், மருத்துவர்கள் சென்று விட்டனர்.  இருந்தவர்களும் செல்போன் பேசி கொண்டும், வாட்அப், பேஸ்புக் பார்த்து  கொண்டும் இருந்தனர்.

Tags : cement board ,bus station ,Wattalakudu ,
× RELATED வடசேரி பஸ் நிலையத்தில் நீர் கசிவு ஆறாக ஓடிய தண்ணீர்