×

முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல்

சேதுபாவாசத்திரம், ஜூன் 7: சேதுபாவாசத்திரம் ஜமாத் தலைவராக கடந்த சில மாதங்களுக்கு முன் நாகூர்பிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை முன்னாள் ஜமாத் தலைவர் நிஜாம்மைதீன் தரப்பினர் ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ரம்ஜான் தொழுகை முடிந்து அஸ்ரத்துக்கு சம்பளம் கொடுக்க பணம் வசூல் நடந்தது.
 இதற்கு இருதரப்பினரும் தனித்தனியாக வசூல் செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருதரப்பினரும் கலைந்து சென்றனர். ஆனால் அன்று மாலை பள்ளிவாசல் முன்பாக நிஜாம் மைதீன் தரப்பினர் ராஜ்முகமது, மஸ்தான், தமீம் அன்சாரி, அம்ஷத், ஜெகன், சகாபுதீன், அசாருதீன் ஆகியோர் குழுவாக நின்றனர். அப்போது அங்கு வந்த நாகூர்பிச்சை தரப்பை சேர்ந்த ஜமாத் செயலாளர் சையது பாதுஷா (23), ராவுத்தர் ஷேக்காதி மற்றும் சிலருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருகோஷ்டியினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த சையது பாதுஷா, ராவுத்தர்ஷேக்காதி ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சையது பாதுஷா கொடுத்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து தமீம் அன்சாரி (35), ஜெகன் (45) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags : confrontation ,
× RELATED மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும்...