கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, கறம்பக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

கந்தர்வகோட்டை, ஜூன் 7: ஆதனக்கோட்டை, புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக இன்று மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்திலும் மற்றும் புதுப்பட்டி 110 கி.வோ - 33கே.வி மற்றும் பழைய கந்தர்வகோட்டை 33 கே.வி - 11 கே.வி துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்கர், தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல் மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி,
கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி மற்றும் புதுப்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டாங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பழைய கந்தர்வகோட்டை, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடிப்பட்டி, அக்கச்சிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு இன்று (7ம்தேதி) இன்று காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் மணிமுத்து தெரிவித்துள்ளார்.
கறம்பக்குடி: கறம்பக்குடி ரெகுநாதபுரம் நெடுவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்திற்–்குட்பட்ட பகுதிகளில் இன்று (7ம்தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி கறம்பக்குடி, நரங்கியப்பட்டு, தீத்தான்விடுதி, குலந்த்திராண்பட்டு, பிலாவிடுதி, செவ்வாய்பட்டி, கரம்பவிடுதி, திருவோணம், காடம்பட்டி, பாப்பாப்பட்டி, கிலாங்காடு, கீராத்தூர், தட்டாமனைபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, கே.கே.பட்டி, பந்துவாக்கோட்டை, வாண்டான்விடுதி, மருதன்கோன்விடுதி, மைலன்கோன்பட்டி, அம்புக்கோவில், மங்களாக்கோவில், வெள்ளாளவிடுதி, வேலாடிப்பட்டி, சுந்தம்பட்டி, பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி, சூரக்காடு, முல்லங்குறிச்சி, சவேரியார்பட்டினம், கருகீழத்தெரு, கருதெற்கு தெரு, வேட்டையார் கோவில்,திருமுருகப்பட்டினம், குரும்பிவயல், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை கறம்பக்குடி உதவி மின் செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Atanakottai ,Karambukudi ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...