×

குண்டும் குழியுமாக மாறிய திம்மூர்- குளத்தூர் சாலை

பாடாலூர், ஜூன் 7: ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் இருந்து குளத்தூர் செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் இருந்து குளத்தூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட பொருட்களையும், விவசாய நிலங்களில் விளையும் மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், நிலக்கடலை, மிளகாய், கம்பு, சோளம் உள்ளிட்ட விளைபொருட்களையும் இந்த சாலை வழியாக தான் விவசாயிகள் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
இந்த சாலை வழியாக கொளக்காநத்தம் மற்றும் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே திம்மூர் -குளத்தூர் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Thimmoor-Kulathur ,pit ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...