×

அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் கூத்தாநல்லூரில் புதிய உதயம் தாஜ் அவென்யூ

மன்னார்குடி, ஜூன் 7: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நேருஜி சாலையில் ஜெகேஆர் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாஜ் அவென்யூ என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் மிக குறைந்த விலையில் மனைகள் வாங்கி உடனடியாக வீடுகளை கட்டுவதற்கு ஏதுவாக பல்வேறு அளவுகளில் வீட்டு மனைப்பிரிவுகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதுகுறித்து ஜெகேஆர் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கூறுகையில்,
கூத்தாநல்லூர் நகரில் முதல் முறையாக நேருஜி சாலையில் பள்ளி வாசல் எதிரில் தாஜ் அவென்யூ என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை அமைத்துள்ளோம். தாஜ் அவென்யூ வீட்டு மனைப்பிரிவில் தரமான தார்சாலைகள், தெருவிளக்குகள், சுகாதாரமான குடிநீர் வசதி, நகரை சுற்றிலும் பாதுகாப்பிற்காக சுற்றுச்சுவர், அனைத்து வசதிகளுடன் கூடிய சிறுவர் விளையாட்டு பூங்கா, பாதுகாப்பான சிறந்த நுழைவாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ் அவென்யூவின் மிக அருகில் பள்ளிகள், கல்லூரிகள், காவல் நிலையம், மருத்துவமனைகள் அமைந்துள்ளது. தாஜ் அவென்யூவின் வீட்டு மனைகளை வாங்குவதற்கும், உடனடியாக வீடுகளை கட்டுவதற்கும் தேசியமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கிகளில் உடனடியாக கடன்களை பெறலாம். வில்லங்க மற்ற மூலப்பத்திரமும், 2 வருடத்திற்கு வீட்டு மனை இலவசமாக பராமரிப்பு செய்து தருகிறோம். மனைப்பிரிவு அருகிலேயே புதிய பேருந்து நிலையமும், நகராட்சி அலுவலகமும் உள்ளது.
எனவே உங்கள் மதிப்புமிக்க சேமிப்பை பாதுகாப்பாக சிறந்த முறையில் தாஜ் அவென்யூவில் முதலீடு செய்ய ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம். இன்றைய சேமிப்பு நாளைய வளமான வாழ்விற்கு உயர்வு தரும் என்பதை கருத்தில் கொண்டு தாஜ் அவென்யூவில் மிக குறைந்த விலையில் தரமான வீட்டு மனைகளை வாங்க பொதுமக்களை அன்புடன் வரவேற்கிறோம். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

Tags : Taj Avenue ,Koothanallur ,
× RELATED கூத்தாநல்லூரில் முன்விரோதம் காரணமாக...