×

தூர்வார மக்கள் கோரிக்கை அரசு மருத்துவமனைக்கு எதிரே அகற்றிய அடிபம்பை மீண்டும் பொருத்தியது நகராட்சி நிர்வாகம்

மயிலாடுதுறை, ஜுன் 7: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் உள்ள அரசு மருத்துவமனை எதிரில் நகராட்சி அடிபம்பு ஒன்று இருந்தது. இது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு குடிநீர் வழங்கி வந்தது. 50 ஆண்டுகாலமாக இயங்கிவந்த அந்த அடிபம்பை திடீரென சில தினங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் அகற்றி விட்டது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் வழங்கும் மருத்துவமனையாகத் திகழ்கிறது. பிரசவத்திற்காக கிராமப் புற ஏழை எளியவர்கள் நூற்றுக்கணக்கில் தினந்தோறும் வந்து குவியும் இடமாகத் திகழ்கிறது. புறநோயாளிகள் வருகையை கட்டுப்படுத்த முடிவதில்லை. வருபவர்கள் நீண்டநேரம் இருப்பதாலும் நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு தண்ணீர் தேவைக்கும், பிரசவத்திற்கு வந்திருக்கும் தாய்மார்களுக்கு தேவையான தண்ணீர் தேவைக்கும் தடுமாறும் சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் தண்ணீர் இல்லை, உடனே அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 50 ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த அடிபம்பை உடனே பொருத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் நேற்று வெளியாகி யிருந்தது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் அரசு மருத்துவமனைக்கு சென்று இடத்தை பார்வையிட்டு பொதுமக்களின் தேவையைக் கருதி நேற்று மதியம் அதே அடிபம்பை மீண்டும் அதே இடத்தில் பொறுத்தியது. இதனால் மருத்துவமனைக்கு வந்திருந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கும், தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : administration ,residents ,state hospital ,Dwarwaras ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...