×

விவசாயிகளுக்கு அழைப்பு கீழநெப்பத்தூரில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

சீர்காழி, ஜூன் 7: சீர்காழி அருகே கீழ நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதீப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, வட்டார கல்வி அலுவலர் பூவராகவன், ஒன்றிய பொறியாளர் முத்துகுமார், கூட்டுறவு இயக்குநர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை உமா வரவேற்றார்.
எம்எல்ஏ பாரதி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ பூராசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் போகர்ரவி, மாமல்லன், அஞ்சம்மாள், திருமாறன், பாலா, ராஜ்மோகன், அமிர்தலிங்கம், ஓவர்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags : school building ,
× RELATED கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் குழந்தை நேய பள்ளி கட்டிடம் திறப்பு