×

600 கி.மீ நடத்த திட்டம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பதவி உயர்வை வழங்க வேண்டும்

நாகை, ஜூன்7: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தஞ்சை சரகத்தில் தலைமை காவலர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சை சரகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட காவல் அலுவலகங்கள் அடங்கும். இந்த சரக எல்லையில் கடந்த 1994ம் ஆண்டு காவலர்களாக பணியில் இவர்கள் சேர்ந்தனர். இவ்வாறு பணியில் சேர்ந்த காவலர்கள் தலைமை காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பணியில் சேர்ந்த 25 ஆண்டுகள் நிறைவு பெற்றவுடன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு 25 ஆண்டுகள் பணி முடித்த தஞ்சை சரகத்தில் 70 தலைமை காவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டிய நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இது குறித்து பாதிக்கப்பட்ட காவலர்கள் சிலர் கூறியதாவது: தஞ்சை சரகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம் அடங்கும். இங்கு கடந்த 1994ம் ஆண்டு பணியில் சேர்ந்த 70 காவலர்கள் உள்ளனர். பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆனால் தானாகவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்எஸ்ஐ) பதவி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு பதவி உயர்வு சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட காவல் எல்லையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை சரகத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறை நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை பதவி உயர்வு என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தால் அதற்கு பல மாதங்கள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வை காலதாமதம் இன்றி விரைவில் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...