×

பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் பேரழிவு திட்டங்களுக்கு எதிராக 12ம்தேதி மனிதசங்கிலி போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 7: தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய பேரழிவு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
இதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் பேரழிவுக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனினின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சாகர்மாலா மற்றும் அனல்மின் நிலையம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழகத்தை வெப்பமண்டலமாக்க உள்ளது. நடவு நட்ட வயலில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த அரசு, கெயில் நிறுவனம் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு உடந்தையாக இருக்கிறது. தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் பேரழிவு திட்டங்களை கைவிட வேண்டும். காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 12ம் தேதி விழுப்புரம் முதல் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வரை சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். அனைத்து அரசியல் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்களும், விவசாயிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போராட்டத்தின் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை அழிக்க கூடிய திட்டங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : disaster ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...