×

கரூர்- சேலம் பைபாஸ் வாகன உதிரிபாக கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கரூர், ஜூன் 7: பைபாஸ் சாலையோரம் வாகன உதிரிபாகங்களின் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுஏற்படுகிறது.
கரூரில் இருந்து சேலம் செல்லும் பைபாஸ் சாலையில் இருந்து பெரிச்சி பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்களின் கழிவுகளை கொட்டி பின்னர் அவற்றை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் துர்நாற்றத்துடன் புகைஎழுகிறது. இப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மோட்டார் வாகனங்களை பழுதுபார்க்கும் கடை வைத்திருப்போர் கழிவுகளை குப்பையில் கொட்ட வேண்டும். உள்ளாட்சி அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.
இதனால் மோட்டார் வாகன உதிரிபாகங்களின் கழிவுகளை எரிக்க தொடங்கி விட்டனர். இவ்வாறு எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Karur-Salem Bypass ,
× RELATED கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் பழுதடைந்த...