தற்காலிக பணியாளர் தட்டிக்கழிப்பதால் அவதி: இரும்பூதி பட்டி இ சேவை மையம் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை

குளித்தலை, ஜூன்7: குளித்தலை இரும்பூதிபட்டியில் உள்ளது அயன் சிவாயம் தொடக்க வேளாண்மை சங்க அலுவலகம். இச்சங்க அலுவலகத்தில் இப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு இ.சேவை மையத்தை தொடங்கி உள்ளது.
இம் மையத்தில் இப்பகுதி பொதுமக்கள் பட்டா, சிட்டா, பெயா; மாற்றம், சாதி சான்றிதழ், வருமானசான்றிதழ், வாரிசுசான்றிதழ், இருப்பிடசான்றிதழ், ஆன்லைன் மூலம் இ-சேவை மையத்தில் பதிவு செய்து வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் உத்தரவு பெறப்பட்டவுடன் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் பதிவு இறக்கம் செய்து பெற்றுக்கொள்ள வசதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் அயன் சிவாயம் வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தற்போது தற்காலிக பணியாளரை கொண்டு இ-சேவை மையம் செயல்படுகிறது. இதனால் பணிகள் தாமதம் ஆகிறது.
மேலும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ-மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித்தொகை பெறவும் மற்ற சலுகைகள் பெறவும் வருவாய்துறை மூலம் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் முக்கியமாக தேவைபடும் நிலையில் இங்கு பணியாற்றும் தற்காலிக பணியாளர்; மாணவர்களின் பெற்றோர்களிடம் 5 கிமீ தொலைவில் உள்ள வை.புதூர் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு செல்லுங்கள் என கூறி தட்டிகழித்து வருகிறார்.
அதனால் இந்நிலை குறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இரும்பூதிப்பட்டி அயன் சிவாயம் வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இ.சேவை மையத்தை பயன் பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Radiation bar e service center ,
× RELATED பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து...