×

அணைக்கட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

அணைக்கட்டு, ஜூன் 7: அணைக்கட்டு அருகே அரசு உயர்நிலை பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட தேவிசெட்டிகுப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தேவிசெட்டிகுப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாமல் இருந்தது. இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை கட்ட ₹1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. இருப்பினும் இடம் தேர்வாகாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தார். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுப்பணி துறையினர் மற்றும் கல்வி துறையினர் வருவாய் துறையினரிடம் கேட்டுக்ெகாண்டனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடங்களை வருவாய் துறையினர் அளவீடு செய்து அதனை உடனடியாக அகற்றிட கால அவகாசம் வழங்கினர். இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை விட மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு, இடத்தை மீட்க நேற்று வருவாய் துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, நேற்று வேப்பங்குப்பம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, தாசில்தார் பெருமாள், மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளரிகளிடம் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் உரிமை கோருவதற்கான போதுமான ஆவணங்கள் இல்லாததால் இடத்தை ஒப்படைத்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அந்த இடம் மீட்கப்பட்டு பொதுப்பணிதுறை அலுவலர்களிடம் ஒப்படைக்கபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Rescuers officers ,Occupied Territories ,dam ,Government High School ,
× RELATED குல்லூர்சந்தை அணையில் கழிவுநீர்...