×

சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 40 நடைபாதை கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: காசிமேட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட  40க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை போலீசார் அகற்றினர். காசிமேடு சி.ஜி.காலனி மீன் மார்க்கெட் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் குடிநீர் லாரி, அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட காய்கறி கடை, பூக்கடை, பழக்கடை, பொம்மை கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது, போலீசாருடன் நடைபாதை வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : pavement shops ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...