×

உத்திரமேரூர் பேரூராட்சியில் 30 தெருநாய்கள் பிடிபட்டன

உத்திரமேரூர், ஜூன் 7: உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளது. இவைகள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்வோரை விரட்டி கடித்து பயமுறுத்துகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்துகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பயத்தில் கீழே விழுந்து காயமடைக்கின்றனர். மேலும், சாலையோரத்தில் உள்ள குப்பை கழிவுகளை கிளறிவிடுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துற்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, கடந்த 3ம் தேதி, உத்திரமேரூர் பேரூராட்சி பஞ்சாங்கய்யர் தெருவில் வெறிநாய் ஒன்று, அப்பகுதியில் செல்வோரை கடித்து வந்தது. அந்த நேரத்தில், அவ்வழியாக சென்ற பெருநகர் காவல் நிலைய எஸ்ஐ சரவணன் என்பவரையும், நாய் கடித்து குதறியது. அவருக்கு பின்னால், நடந்து வந்த ஆசிரியர் வெற்றி என்பவரையும் கடித்து குதறியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 4ம் தேதி, தினகரன் நாளிதழில் வெளியானது. இதைதொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில், ஊழியர்கள் நேற்று உத்திரமேரூர் பகுதி முழுவதும் தெருவில் சுற்றி திரிந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்தினர். இதில், 30த்துக்கும் மேற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தினகரன் நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : peasants ,panchayat town ,
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...