கருங்குழி பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

மதுராந்தகம், ஜூன் 7: மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மலைபாளையம் அரசு பள்ளியில் நேற்று நடந்தது.
கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார். தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த மௌலி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள்    மற்றும் மலைபாளையத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக  பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, காற்றில் மாசு கலக்காமல் நாம் எவ்வாறு செயல்படுவது எனும் தலைப்பில் மாணவர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தப்பட்டது. மேலும், பேரூராட்சியில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், சுகாதார செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டன. மேலும், மழைநீர் சேகரிப்பு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகள் கருங்குழி பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டன.

Tags : celebration ,World Environment Day ,
× RELATED அப்துல் கலாம் பிறந்த தினவிழா அக்.15 மாணவர்கள் தினமாக அறிவிக்க கோரிக்கை